
இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக சோமலிய மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சர்வதேச நாடுகள் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
