LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 9, 2019

கோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது- சுமந்திரன்

கோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால்
இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியது.

ஜனாதிபதி தேர்தல் எங்கள் முன் வருகிற போது இதற்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது தெற்கில் நடக்கும் ஒரு அரசியல் போட்டி. இதில் எங்களை ஈடுபடுத்த தேவையில்லை என்ற பரப்புரை தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படுகிறது.

ஆனால் சென்ற தேர்தலில் மக்கள் அதற்கு செவி கொடுக்கவில்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் கூடுதலான வாக்குகள் கிடைத்தமையால் தான் மற்றைய பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ கூடிய வாக்கு பெற்ற போதும் மைத்திரிபால சிறிசேன வெல்லக் கூடியதாக இருந்தது.

அப்பொழுது மஹிந்த ராஜபக்ஷ சொன்ன கருத்து ஈழம் வாக்குகளால் நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன் என்று. இதனைக் கேட்க மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

நான் இவர்களை தோற்கடித்து விட்டேன். இனி தமிழ் தேசியம் என்ற ஒன்று கிடையாது. தமிழ் மக்களுடைய உரித்துக்கள் என்று எதுவும் கிடையாது. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன். அரசியலி உரித்துக்கள் என்று பிறிதாக எதுவும் இந்த நாட்டில் இல்லை. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன் என்று மார் தட்டிக் கொண்டு இருந்தவர் தேர்தலில் தோற்று இது ஈழத்தில் வாக்குகளால் அடைந்த தோல்வி என்பதை ஒப்புக் கொண்டார்.

நாங்கள் தெளிவான ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருககிற அரசியல் கட்சி. அரசியல் கட்சிகளினுடைய கூட்டமைப்பு. எங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெட்டத்தெளிவாக தெரியும். எங்களுடைய மக்களுக்கும் தெரியும்.

இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் தெரியும். பத்திரிகையில் கட்டுரை எழுதும் அரசியல் வித்தகர்கள் சொல்வதைப் போல் நாங்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனில் முடிவு என்ன?. இந்த நாட்டினுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல். நாங்கள் வாக்களித்தாலோ, வாக்களிக்காமல் விட்டாலோ ஒருவர் வெல்லத்தான் போகிறார்.

தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக எவரும் வெற்றி பெறாமல் இருக்கப் போவதில்லை. அதிலும் இரண்டு பேரில் ஒருவர் தான் வெல்லப் போகிறார். மிகுதி 32 பேருக்கும் தாங்கள் வெல்வதற்காக போட்டியிடவில்லை என்பது தெரியும். நாங்கள் வாக்களிக்காமல் விட்டால் யார் வெல்லுவார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

அப்ப இந்த கட்டுரையாளர்கள் எல்லாம் எதை விரும்புகிறார்கள். யார் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். எங்களுக்கு வாரவாரம் இலவசமாக ஆலோசனை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு இது தெரியாதா? ஆகவே அந்த வெற்றிக்காக தானா இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

தெரிவு ஒன்று தான் உள்ளது. வேறு தெரிவு இல்லை. எங்களுடைய விருப்பங்கள் எல்லாம் ஏராளம் இருக்கிறது. அது வேற விடயம். எங்களுடைய விருப்புக்காக வாக்களிப்பதற்கு அங்கு தெரிவு இல்லை. வாக்களிக்காமல் விட்டால் கோட்டாபய வெல்லுவதை எவரும் தடுக்க முடியாது.

வாக்களித்தாலும் அவர் வெல்லுவதை தவிர்க்க முடியுமா என்ற ஒரு கேள்விக்குறி இருக்கிறது. தமிழ் மக்கள் அனைவருமே சென்று வாக்களித்தால் அதை தடுக்க கூடிய நிலமை இருக்கிறது.

2005 ஆம் ஆண்டிலே நாங்கள் ஒரு பாடத்தை படித்தோம். சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகார பகிர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதுதான் எங்களுடைய சிந்தனை. இதில் மாற்றம் இல்லை.

சஜித் பிரேமதாச தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்களை சொல்லியிருக்கிறார். சொல்லுவது எல்லாவற்றையும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இல்லை. ஆனால் குறைந்தது அதை சொல்வதற்காக துணிவாவது இருந்திருக்கிறது.

இது ஒரு பல்லினத்துவ நாடு. பல சமயங்கள் இருக்கின்றன. பல மொழி பேசுகின்ற மக்கள் வாழுகின்ற நாடு. அந்த பல்லினத் தன்மையை நான் பாதுகாப்பேன். மற்றவர் எதுவுமே சொல்லவில்லை. அதி உச்ச அதிகார பகிர்வை நான் செய்வேன் என சொல்லியிருக்கிறார். புதிய அரசியலமைப்பு முயற்சியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார்.

பௌத்திற்கு முதலிடம் கொடுத்த போதும் சகல சமயங்களும் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதை சொல்லியாவது இருக்கிறதார். அதற்கு மக்களுடைய ஆணை இருக்க வேண்டும். பின்னர் அதை நாம் பேசமுடியும். எனவே நாம் சஜித் பிரேதமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7