LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 9, 2019

நியூஸிலாந்து அணியை பந்தாடியது இங்கிலாந்து அணி!

நியூஸிலாந்து அணிக்கெதிரான
நான்காவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 76 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மெக்லீன் பார்க், நேப்பியர் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜோனி பேயர்ஸ்டொவ் மற்றும் டொம் பென்டோன் ஆகியோர் இணைந்து, 16 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

இதன்போது, ஜோனி பேயர்ஸ்டொவ் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய டாவிட் மாலன், டொம் பென்டோனுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் இணைந்து 42 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர, இதன்போது டொம் பென்டோன் 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் ஓய்ன் மோர்கன், டாவிட் மாலனுடன் ஜோடி சேர்ந்து அணியை வலுவான நிலைக்கு உயர்த்தினார்.

இருவரும் இணைந்து 182 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர். இதன்போது ஒய்ன் மோர்கன் 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய சேம் பிளிங்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், டாவிட் மாலன் ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களையும் பெற, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குறிப்பாக இதன்போது டாவிட் மாலன், தனது முதல் ரி-20 சதத்தையும் பதிவு செய்தார். அவர் 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதன்போது இங்கிலாந்து அணி பல சாதனைளையும் பதிவு செய்தது. 241 என்ற ஓட்ட எண்ணிக்கையே இங்கிலாந்து அணியின் அதிக் கூடிய ரி-20 கிரிக்கெட் ஓட்ட எண்ணிக்கையாகும்.

மேலும், ரி-20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிக் கூடிய இணைப்பாட்டமாக மாலன் மற்றும் மோர்கனின் 182 ஓட்டங்கள் இணைப்பாட்டம் பதிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்து அணியின் அதிகவேக அரைசதத்தை மோர்கன் பதிவு செய்தார். அவர் 21 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.

இதேபோல, இங்கிலாந்து அதிகவேக சதத்தை டாவிட் மாலன் பதிவு செய்தார். அவர் 48 பந்துகளில் சதத்தை கடந்தார்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தீ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 242 என இமாலய ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி, களமிறங்கிய நியூஸிலாந்து அணி, ஆறுதல் அளிக்கும் ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் கொலின் முன்ரோ ஆகியோர் இணைந்து 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

இதன்போது, மார்டின் கப்டில் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களம் புகுந்த டிம் செய்பர்ட், 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து கொலின் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்த கொலின் டி கிராண்ட்ஹோமி, 11 ஓட்டங்களை பகிர்ந்திருந்த வேளை 7 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

இதன்பிறகு சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த கொலின் முன்ரோவும் 30 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அதன்பிறகு களமிறங்கிய எந்த வீரர்களும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை.

ரோஸ் டெய்லர் 14 ஓட்டங்களுடனும், டார்ல் மிட்செல் 2 ஓட்டங்களுடனும், மிட்செல் சான்ட்னர் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டிம் சவுத்தீ 39 ஓட்டங்களுக்கும், இஷ் சோதி 9 ஓட்டங்களுக்கும், போல்ட் 8 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, பிளாயர் டிக்னர் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இதன்படி நியூஸிலாந்து அணியால், 16.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 76 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், மெத்தியூ பார்க்கிஸன் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்தான் 2 விக்கெட்டுகளையும், சேம் கர்ரன், டொம் கர்ரன் மற்றும் பெட்ரிக் பிரவுண் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டாவிட் மாலன் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 2-2 என்ற கணக்கில் இங்கிலாந்து சமநிலைப்படுத்தியுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை மறுதினம் ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7