மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு டிப்பர் வாகனத்தில், பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினரிற்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சோதனையில் ஈடுபட்டப்போதே இந்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மன்னார் வீதி ஊடாக அனுமதிப்பத்திரம் இல்லாது, டிப்பர் வாகனத்தின் ஊடாக குறித்த மர குற்றிகளை எடுத்து செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் வாகனத்தை செலுத்திய மன்னார் பேசாலையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பூநகரி பொலிஸார், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.