ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றில் இடம்பெற்ற ஆசிய நாடுகள் தொடர்பான துணைக்குழு கூட்டத்தில் உதவி ராஜாங்க செயலாளர் அலிஸ் ஜி வெல்ஸ் இந்த விடயம் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், “இலங்கையில் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு இடம்பெற்றிருக்கவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
குறிப்பாக கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான நீதிப்பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவும் இல்லை.
இந்நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களில் தொடர்ச்சியாக அமெரிக்கா அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.