நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் இன்று (சனிக்கிழமை) முதல் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தீப உற்சவ நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அயோத்தி நகரின் சரயு நதியின் கரையோரத்தில் ஐந்தரை இலட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இதனால் அயோத்தி முழுவதும் ஒளிமயமாகவே உள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது சுமார் மூன்று இலட்சம் அகல் விளக்குகளை ஏற்றியமை கின்னஸ் சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு ஐந்தரை இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி ஒளிரவிடப்பட்டுள்ளது புதிய கின்னஸ் சாதனையாக பதிவாகியுள்ளது.
அயோத்தியில் நடைபெற்றுவரும் தீப உற்சவ நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.