சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மராட்டியம், ஹரியானா மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இனி அந்த மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றிக்கு பா.ஜ.க.வின் பங்களிப்பும் முக்கியக் காரணம் என தெரிவித்தார்.
பா.ஜ.க.வை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்றும் இனிமேல் தமிழகத்தில் பா.ஜ.கவின் காலம்தான் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்