நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், ஒன்ராறியோவின் 121 ஆசனங்களில் 79 ஆசனங்களை லிபரல் கட்சி வெற்றிபெற்றமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “புதிய மத்திய அரசோடும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனும் உண்மையோடு சமரசத் தொனியில் அல்லது இணக்கமான பாதையில் செல்லத் தயார்.
கசப்பான தேர்தல் பிரசாரத்தை கடந்து செல்லத் தயாராக உள்ளேன். அத்தோடு, காபன் வரியை எதிர்த்துப் போராடவுள்ளேன்” என கூறினார்.
பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 156 இடங்களை கைப்பற்றியது.