(ஜெ.ஜெய்ஷிகன்)
ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான கராத்தே போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில(19,20) களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த போட்டி நிகழ்வில் வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் சார்பில் 21 மாணவர்கள் கலந்து கொண்ட தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அதில் 04 தங்கப் பதக்கங்களையும் 09 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சுகாரி சோட்டோகான் கராத்தே சங்கத்தின் சார்பில் சிரேஸ்ட்ட பயிற்றுவிப்பாளரான அ.யோசப் (4th Dan,A
Grade Judge) ) ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமான த.சதானந்தகுமார் ((2nd Dan) ) ஆகியோர் பயிற்றுவித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பதக்கங்களை வென்ற மாணவர்களின் விபரம் வருமாறு
Kumite, Kata போட்டிகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்கள் முறையே பாக்கியராசா யுனித், சுதர்சன் டென்சிக்கா, அகிலன் அக்ஷயா,
அகிலன் கன்ஷிகா,
வெள்ளி பதக்கங்களைப் பெற்றவர்கள் முறையே பாக்கியராசா யுனித், கோணேஸ்வரன் றொசேன், மோகனரூபன் தசாரிக்கா (02 பதக்கங்கள்), நடராஜா நியோகிருஸ்ணன், மோகனதாஸ் வருண்காந், அகிலன் அக்ஷயா, அகிலன் கன்ஷிகா, நரேந்திரராஜ் அபினயா,
வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்கள் முறையே உதயகுமார் ஷரோன் றேசாந், உதயராசா கேசோபன் ஆகியோரே பதக்கங்களை வென்ற மாணவர்கள் ஆவர்.