வீழ்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதற்கு அமைவாக ஜூலை மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளை அடிப்படையாக கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 166,975 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன் பின்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்தது. குறிப்பாக ஏப்ரல் மாதம் 37,802 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதம் 63,072 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மேலும் ஜூலை மாதம் 115,701 சுற்றுலாப் பயணிகளும், ஓகஸ்டில் 143, 587 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு மொத்தமாக 2,333,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரையில் 1,267,737 பேர் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.