
மோதப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு வயதுச் சிறுவனின் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ரிஜனல் வீதி 57 மற்றும் டேன்டொன் வீதிப் பகுதியில் பெர்ரி அவனியூவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வதிவிடம் ஒன்றின் தனிப்பட்ட பாதையில் இடம்பெற்ற இந்தச் விபத்தில், பிக்கப் ரக வாகனம் ஒன்று சிறுவனின் உடலின் கீழ்ப் பாகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.
மோசமான காயங்களுக்கு உள்ளான அந்தச் சிறுவன் உடனடியாகவே உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்விபத்து தொடர்பாக டூர்ஹம் பிராந்திய பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
