நடவடிக்கை எடுக்கக் கோரி ரொறன்ரோவில் பத்தாயிரம் மக்கள் அணி திரண்டனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கனடா முழுவதும் டசன் கணக்கான நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதும், நாட்டின் மிகப்பெரிய போராட்டமாக குயின்ஸ் பூங்காவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணி திரண்டனர்.
இதன்போது, போராட்டக்காரர்கள் காலநிலை மாற்றம் குறித்த பாதைகளையும் கோஷங்களையும் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவில் நேற்று வன்கூவர், விண்ட்சர், கல்கரி, லண்டன், ஓட்டாவா, நோவா ஸ்கோடியா மற்றும் எட்மண்டன் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்வீடன் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கால் ஈர்க்கப்பட்ட ஒரு இளைஞர் தலைமையிலான இயக்கம் குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.