சி.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டண உயர்வு விவகாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.சி.பி.எஸ்.சி.யில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் எஸ்.சி / எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டாரகள் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “CBSE தேர்வுக் கட்டணத்தை SC/ST மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது! NEXT, புதிய கல்வி கொள்கை வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.





