நோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நோர்வே நபர் ஒஸ்லோ நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
பிலிப் மன்ஷாஸ் என்ற 21 வயதான குறித்த நபர் மீது கொலை முயற்சி மற்றும் அவரது வளர்ப்பு சகோதரி கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குறித்த விசாரணையின்போது அவரை தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து குறித்த நபரை 4 வாரங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் புறநகரில் உள்ள அல்-நூர் இஸ்லாமிய தொழுகை இடத்தின் மீது துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்குப் பின்னர், அவரது வீட்டில் 17 வயது வளர்ப்பு சகோதரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தாக்குதல் நடந்த நேரத்தில் பள்ளிக்குள் மூன்று பேர் இருந்தனர். இதன்போது சந்தேக நபர் ‘2 துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் ஒரு துப்பாக்கியையும்’ எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.