
தான் பிரபலமாவதற்காக அஞ்சல் பெட்டிக்குள் குளிர்பானத்தை ஊற்றிய கனடாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். கனடாவைப் பொருத்தவரையில் அஞ்சல் பெட்டியை சேதப்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அவர் இதுதொடர்பாக வௌியிட்டுள்ள காணொளி ஒன்றில், அஞ்சல் பெட்டியின் மூடியைத் திறக்கும் அந்த இளம்பெண், தனது கையிலிருக்கும் போத்தலில் இருந்த குளிர்பானம் முழுவதையும் தபால் பெட்டிக்குள் ஊற்றிவிட்டு, போத்தலுடன் வேகமாக அங்கிருந்து நகர்வது தெரிகிறது.
இதன்போது அஞ்சல் பெட்டிக்குள் இருந்த கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தும் நாசமாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஞ்சல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் அஞ்சல் பெட்டியை சேதப்படுத்துவோருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
குறித்த காணொளி துரிதமாகப் பகிரப்பட்ட அதேநேரம், அந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள கனடிய மக்கள் பலர், அந்த பெண்ணைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
