21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இன்று (வெள்ளிக்கிழமை) சவுதி அரேபிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய ஆண்களைப் போன்றே பெண்களும் எவ்வித வேறுபாடுமின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது.
தங்களது திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் விவாகரத்தை பதிவு செய்யும் உரிமையும் சவுதி பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சவுதியில் பணியிடங்களில் பெண்களுக்கான வாய்ப்புகளை வழங்குவது தொடர்பான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்மூலம், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அனைவரும் பாலினம், வயது, மாற்றுத்திறன் உள்ளிட்ட எவ்வித வேறுபாடுமின்றி வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.