
இதன்போது, டொல்பின் வான் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பாரவூர்தி முன்பக்கம் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்றது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் சுதன் என்பவருடைய வீட்டிலேயே இந்த இடர் இடம்பெற்றது.
மின்னல் தாக்கத்தின் பின்னர், ஊரவர்கள் திரண்டு சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்தின் பின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
குறித்த சம்பவம் மின்னல் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டதா என்பது தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
