
சுதந்திரக் கட்சியின் தெஹிவளை பிரதான காரியாலயத்தை இன்று (சனிக்கிழமை) திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி மற்றும் முக்கியமான அமைச்சு பதவிகள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்கும் பின்னணியில் அவர்களுடன் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு கூட்டணி அமைக்க முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மண்டியிட வேண்டிய அவசியமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடையாளங்களை பாதுகாத்துக் கொண்டுதான் கூட்டணி அமைக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் நாங்கள் மொட்டுச் சின்னத்திற்குள் கரைந்து போய்விடுவோம்.
சுதந்திரக் கட்சியான நாங்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்த போது அவர்கள் நல்லவர்களாகிவிட்டனர். நாங்கள் துரோகிகளாகி விட்டோம்.
நாம் மைத்திரியை ஜனாதிபதியாகவும், மஹிந்தவை பிரதமராகவும் பதவியேற்கும் வகையிலேயே கூட்டணியை கேட்கிறோம். அதனைத்தான் இப்போதும் செய்வோம் என்று நாம் கூறுகிறோம். அன்று ஐந்து நாட்களுக்குள் இந்த காரியத்தை செய்ய முடியும் என்றால் ஏன் இப்போது முடியாது?
பிரதமர் ரணில் விக்ரமசிங்க போன்று பின்னால் இருந்து கத்தியால் குத்தவில்லையே. கட்சிக்குள் இருக்கின்ற கோபதாபங்களை நிவர்த்தி செய்து மைத்திரியை ஜனாதியாகவும், மஹிந்தவை பிரதமராகவும் ஆக்கினால் எந்தபிரச்சினையும் வராது” என்று அவர் கூறினார்.
