ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு ஏன் மாறுபடுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் இதுதொடர்பாக தமிழக அரசாங்கம் நாளை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இன்று (புதன்கிழமை) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுகிறது.
ஆனால் சில வழக்குகளில் இது மாறுபடுகிறது. அப்படியென்றால் ஒவ்வொரு வழக்கில் ஒவ்வொரு முடிவை எடுக்க அரசியல் அழுத்தம் காரணமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தருமபுரியை சேர்ந்த யோகா செந்தில் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இவரை முன்விடுதலை செய்யக்கோரி அவரது தாய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





