LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C



ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 21, 2019

அவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனை நிராகரிப்பு!

அவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முக்கிய யோசனை ஒன்றினை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.
அகதிகளாக வந்து பல்வேறு விசா பிரிவுகளின் கீழ் அவுஸ்ரேலியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவருபவர்களுக்கான அரச உதவிகள் கடந்த வருடம் மே மாதம் முதல் பெருமளவில் குறைக்கப்பட்டது.
வதிவிட உரிமைக்கான உரிய பதிலுமின்றி எதிர்காலம் குறித்த காத்திரமான பதிலும் இல்லாமல் ஏற்கனவே மன உளைச்சலை எதிர்நோக்கியிருக்கும் இந்த அகதிகளுக்கு வாழ்வாதார உதவியையும் நிறுத்துவதென்பது கொடுமையானது என அவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
அத்துடன், அகதிகள் என்ற அங்கீகாரத்திற்கும், வதிவிட உரிமைக்கான நீதிமன்ற பதில்களுக்கும் காத்திருக்கும் காலப்பகுதியில் தற்காலிக விசாவில் உள்ளவர்களுக்கான நிதியுதவிகளை நிறுத்தக்கூடாது என்ற யோசனையையும் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்திருந்தது.
எனினும் குறித்த யோசனையை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது என அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட விசா வகைகளின் கீழ் உள்ளவர்கள் அவுஸ்ரேலியாவில் பணிபுரிந்து தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அகதிகளின் தனித்தனியான வழக்குகளை பரிசீலித்ததன் அடிப்படையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு இது எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதற்கு தவறுகின்றவர்கள் அவுஸ்ரேலியாவைவிட்டு வெளியேறவேண்டும் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7