
பயங்கரவாத தாக்குதலுக்கும் வித்தியாசமில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனவே, நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து எவ்வாறு செயற்படுவது என அவர் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “கியூபாவைச் சேர்ந்த தோழர் பிடல் கெஸ்ட்ரோ கூறியிருக்கின்றார், ‘கியூபாவில் புரட்சியாளர்களான எங்கள் கையில் பலவிதமான தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. எதிர்காலத்திலும் தவறுகள் இடம்பெறலாம். ஆனால் தேசத் துரோகம் என்னும் செயல் மாத்திரம் எங்களால் தவறிக்கூட மேற்கொள்ளப்படவில்லை என்று’
அவ்வாறே, அரசியல் ரீதியாகவோ, இடது சாரிக் கொள்கையின் போதோ, தேசியவாத செயற்பாடுகளின் போதோ எங்களால் பல தவறுகள் இழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தேசத் துரோகியாக இல்லாத பட்சத்தில் மாத்திரம் நாங்கள் குற்றமற்றவர்களாக இருக்க முடியும்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அரசியல் மாற்றத்திற்கு காரணமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்களை விசாரணை செய்யும் பெரும் அதிகாரத்தை பெற்றிருந்தது.
இந்த தேசத் துரோக அரசாங்கத்தை நிர்மாணிப்பதற்கு மிக முக்கிய பங்காற்றிய அந்த கட்சி, அண்மையில் 51 நாட்கள் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட போது ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன், தியாகத்துடன் செயற்பட்டது.
ஆனால் கடந்த மூன்று நான்கு மாதங்களாக ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை வைத்துக்கொண்டு இந்த அரசாங்கத்தையும், பிரதமரையும் வீட்டுக்கு செல்லுமாறு கோரி வருகிறது. ஆனால் அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் இந்த நாடாளுமன்றத்திற்குள் அதனை பெரும்பான்மையுடன் வெற்றிகொள்ள முடியாதென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் இதனூடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்கு ஒரு ஊக்கத்தை வழங்குவதற்கு அவர்கள் எத்தணிக்கிறார்கள். அவர்களின் சூட்சுமமான நோக்கத்தைத் தெரிந்துகொள்ளாமல் நாங்கள் பேசவில்லை. அதேபோன்று இந்த அரசாங்கம் தற்போது ஒரு பலம் இல்லாத நிலையில்தான் செயற்பட்டு வருகின்றது.
சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் காரணமாக நாட்டின் அனைத்து துறைகளும் ஸ்தம்பித்து இருக்கின்றன. அதேபோன்றுதான் இந்த அரசாங்கமும் மலைபோன்று வரிகளை விதித்து பொதுமக்களின் மீது சுமைகளை ஏற்றி வைத்திருக்கின்றது.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நிகராக செயற்படும் இந்த அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பது” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
