கடந்த கால தவறுகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க, சிறுபான்மையினர் ஒத்துழைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜேயகலா மகேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.இன்று (திங்கட்கிழமை) சுன்னாகம், ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் சிறுபாண்மையினரின் வாக்குகளே யார் ஆட்சியாளர் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. எனவே எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற சரியான முடிவை சரியான தருணத்தில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே கடந்த கால தவறுகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியும் என்றும் அவர் கூறினார்





