நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உபவேந்தர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் 14 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.





