மக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து கரைத்துறைப்பற்று பிரதேச ஒருங்கிணைக்புக் குழுக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச ஒருங்கிணைக்புக் குழுக்கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 12.30 மணியில் இருந்து மாலை 4 மணிவரை பிரதேச செயலக மண்ணபத்தில் இடம்பெற்றது.
இணைத்தலைவர் சிவமோகன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயம் குறிப்பாக நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோருக்கான வீட்டுத்திட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் மீனவர்களின் பிரச்சினை வீதி தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அத்தோடு இராணுவத்தால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அமைச்சின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.