LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, July 27, 2019

யூதர்களினால் பொதுத் தேர்தல் திகதியில் மாற்றம்?

கனேடிய பொதுத் தேர்தல் திகதியை
மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது.

கனேடிய மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

ஆனால், ஒக்டோபர் 21ஆம் திகதி யூதர்களுடைய முக்கிய விடுமுறை நாளும் வருகிறது. குறித்த நாளில் யூதர்கள் வேலைசெய்வதோ, வாக்களிப்பதோ இல்லை எனவே. இதனால் தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்த விசாரணை ஒன்றினை அடுத்து, தேர்தல் திகதியை மாற்றியமைக்குமாறு மத்திய நீதிமன்றம் ஒன்று தேர்தல் தலைமை அதிகாரியைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் தேர்தல் திகதி குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் மட்டுமே தேர்தல் தலைமை அதிகாரிக்கு உள்ளதாகவும், தேர்தல் திகதியை தனித்து மாற்றியமைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7