மொன்ட்ரியலில் மூவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களைத் தேடும் பணியில் கனேடிய விமானப் படையும் ஈடுபட்டு வருகின்றது. குறித்த 18 மற்றும் 19 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர்கள் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாகியுள்ளனர்.அடர்ந்த காட்டுப் பகுதியில் அவர்களைத் தேட மோப்பநாய்கள், ஆளில்லா வானூர்திகள், கவச வாகனகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருவரும் மாறுவேடத்தில் தப்பியோடியதாக சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இருவரும் முதலில் காணாமற் போனதாக நம்பப்பட்டது. எனினும், தீக்கிரையான அவர்களின் காருக்கு அருகில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.





