
மேலும் 150 பேர் மீனவர்களால் மீட்கப்பட்டு லிபியக் கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் லிபியாவுக்கு திரும்பினர் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ட்ரிபோலிக்கு கிழக்கே 120 கி.மீ (74.5 மைல்) தொலைவில் உள்ள லிபிய நகரமான அல் கோம்ஸை விட்டு வெளியேறிய குடியேறிகள் ஒன்று அல்லது இரண்டு படகுகளில் பயணத்தை மேற்கொண்டிருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றது.
லிபியாவில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வைக்கப்பட்டிருக்கும் மனிதாபிமானமற்ற நிலைமைகள் காரணமாக மத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட மக்களை மீண்டும் லிபியாவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று ஐ.நா பலதடவைகள் கூறியுள்ளது.
கடந்த மே மாதம் ரீயூனிசியக் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்ததில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர். உயிர்தப்பிய 16 பேரை ரீயூனிசியக் கடற்படை கரைக்கு கொண்டு வந்திருந்தனர்.
2019 ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் லிபியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பாதையில் சுமார் 164 பேர் இறந்தனர் என்று ஐ.நா கூறியுள்ளது.
