LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, July 19, 2019

வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு 11 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

வரெலியா – அக்கரப்பத்தனை – டொரிங்டன்
தோட்டத்தில் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு 11 வயதான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அதில் ஒரு மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஷமி வயது 12 எனும் மாணவி உயிரிழந்துள்ளதோடு, மதியழகன் சங்கிதா வயது 12 எனும் மாணவியை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7