(ஜெ.ஜெய்ஷிகன்)
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் முதியோர்களுக்கான மருத்துவ முகாம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் 206ஏ கிராம சேவகர் பிரிவில் இன்று சனிக்கிழமை(15) சமூக சேவை உத்தியோகத்தர் அசனார் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி னுச.ஆ.டிஅ முகைதீன் கலந்து கொண்டார். கிராம உத்தியோகத்தர் சஜ்மி பொருளாதார அபிவிருத்தி உத்தி. சுபைர் மற்றும் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பைசல்,N.கனலோஜினி மற்றும் சமூக சேவைப்பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இதில் 110 க்கும் அதிக முதியோர் கலந்து பயன் பெற்றனர். இவர்களுக்கு Blood Testing இரத்த அழுத்த பரிசோதனை என்பன மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன.


