பௌத்தர்களின் பொசன் தினத்தினை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் தாகசாலைகள், அன்னசாலைகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அன்னதான நிகழ்வொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





