
ஈரானிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் அமைச்சினால் நேற்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஆயுத மென்பொருள் கணினி கட்டமைப்பை இலக்குவைத்து, அமெரிக்காவினால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
கணினி அமைப்புக்கள், ஏவுகணை மற்றும் ரொக்கெட் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவினால் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எவ்வாறாயினும் அந்தத் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை எனவும் ஈரானிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் அமைச்சு அறிவித்துள்ளது.
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. அண்மையில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தனர். இதற்கிடையே ஈரானின் தெற்கு பகுதியிலுள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சுமத்தியது.
ஈரான் தமது அணுவாயுதங்கள் தொடர்பான திட்டங்களைக் கைவிடும் வரையில் அதன்மீதான பொருளாதார அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
