
கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது.
இவ்விழாவில் பிரேம் சிங் தமாங்குக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் கங்காபிரசாத் செய்து வைத்தார். பிரேம்சிங்குடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை, ஆளுநர் கங்காபிரசாதை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், 17 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில் சட்ட ஆலோசனை கேட்ட பிறகு மாநிலத்தில் ஆட்சியமைக்கும்படி பிரேம் சிங் தமாங்குக்கு ஆளுநர் கங்கா பிரசாத் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இன்று அவர் பதவியேற்றார்.
சிக்கிம் கிரந்தகாரி மோர்ச்சா கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எஃப்.) 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்தது. இதனிடையே, முன்னதாக, ஊழல் வழக்கில் பிரேம் சிங் தமாங், ஓராண்டு சிறை தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
