இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின்போது உயிரிழந்த டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகளின் இறுதிக் கிரியைகள் அரச மரியாதையுடன் நடைபெற்றது.டென்மார்க் அரச குடும்பத்தினர், டென்மார்க் பிரதமர் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
டென்மார்க் செல்வந்தர் ஆண்டர்ஸ் ஹோல்ச் போல்சனின் (வயது – 46) நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தனர்.
போல்சன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் இந்த தற்கொலை தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
அவர்களின் நான்கு பிள்ளைகளில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் மாத்திரம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












