மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நயகரா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் 15 மற்றும் 17 வயதான மாணவர்கள் இருவரே காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த மோதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.