நிகழ்வொன்றின்போது அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் தலைமையிலான லிபரல் கட்சிக்கான நிதி திரட்டும் நிகழ்வு ஒன்ராறியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டவரை பொலிஸாரின் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் குறித்த சந்தேகநபரின் செயற்பாடு பொதுமக்களின் பாதுகாப்பிற்கோ பிரதமருக்கோ அச்சுறுத்தலாக அமையவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.