மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின்சர்ச்சை கருத்து அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் மீது கல்வீச்சு மற்றும் செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், காந்தியின் ஒற்றை செருப்பு வந்துவிட்டது எனவும், மற்றுமோர் செருப்பிற்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் என் மீது செருப்பு வீசியவரே கவலைபட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





