(பாண்டி)
செங்கலடி பிரதேசத்தில் பொது இடங்கள், அரச கட்டடங்கள், பேருந்துக்கள், பஸ் தரிப்பு நிலையங்கள் அனைத்திலும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம்கள் முற்றாக முகம் மூடுவதற்கு தடை விதித்த சுவர் ஒட்டிகள் வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களால் முஸ்லிம் பெண்கள் முற்றாக முகம் மூடுவதற்கு தடை விதித்த சுவர் ஒட்டிகளை ஒட்டி காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.