பிரான்சில் ஈஃபிள் கோபுரம் போன்ற மற்றுமொரு கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றது.இந்த கோபுரம் அச்சு அசலாக ஈஃபிள் கோபுரம் போன்றே காணப்படுகின்றது. அத்துடன், அளவில் மிகவும் சிறியதாகவும் உள்ளது.
ஈஃபிளின் ‘சிறிய சகோதரி’ என தற்போது அடையாளப்படுத்தப்படும் இந்த ‘மினி’ ஈஃபிள், apdenac-Gare நகரில் அமைக்கப்பட்டு வருகின்றது.
2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் வரை இந்த கோபுரம் இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இதன் நிர்மாணப்பணிகள் நிறைவுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஃபிள் கோபுரம் 324 மீற்றர் உயரம் கொண்டது. எனினும் இந்த புதிய ஈஃபிள் 26 மீற்றர் உயரம் மட்டுமே கொண்டது எனவும், 12 மடங்கு சிறியது எனவும் குறிப்பிடப்படுகின்றது.





