
வவுனியா தோணிக்கல் ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் மா.கதிர்காமராஜாவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி 108 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த அஞ்சலி நிகழ்வில் வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கத்தினர், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர், வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
