நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை முன்னிட்டு ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருன, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனா, கல்குடா உலமா சபைத் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருன, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜெயசுந்தர, ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வினை வழங்கினார்கள்.
பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்விற்கு கல்குடா பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன், குறித்த நிகழ்வு தொடர்பான செய்தி இராஜாங்க அமைச்சரின் முகநூலில் இருந்து பின்னர் தரவிறக்கம் செய்யப்பட்டது.