
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நிதி மோசடி விசாரணை பிரிவில் நேற்று(வியாழக்கிழமை) இவ்வாறு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் போது அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட, இ.மி.ச. பொதுமுகாமையாளர் எஸ்.யு.டீ.குணவர்தன, முன்னாள் பொதுமுகாமையாளர்கள் உள்ளிட்ட பணிப்பாளர்கள் சபைக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
