
பிரெக்ஸிற் உடன்படிக்கையொன்றை எட்டுவதை விட பிரதமரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னுரிமை வழங்குவதையும் ஜூங்கர் விமர்சித்துள்ளார்.
பிரதமர் தெரேசா மே ஒரு சிறந்த அரசியல் தலைவர் என பாராட்டியுள்ள ஜூங்கர் பிரதமருக்கான தகுந்த ஆதரவை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கவில்லையெனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் ஆனால் அதன் முடிவு முதலாவது வாக்கெடுப்பின் முடிவை விட வித்தியாசமானதாக இருக்குமென தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
