
அத்துடன், ‘தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை, எதிர்பார்த்த ஆட்சி மத்தியிலே அமைந்து விட்டது’ என்று ராமாதாஸ் கூறியிருப்பதானது மக்கள் நலனுக்கு பணியாற்றும் தலைவரா என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அக்கட்சி சாடியுள்ளது.
தி.மு.க. நாளேடான முரசொலியில் ராமதாசை விமர்சித்து வெளியிடப்பட்டுள்ள கட்டுரையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் மீண்டும் அமையவுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துணையோடு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம் என்று கூறியிருப்பதானது வழமையான நழுவல் போக்கு என தி.மு.க. குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பா.ம.க. ஆதரித்த கட்சிகளின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கின்ற நிலையில், மக்களின் பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றிற்குத் தீர்வுகாண வேண்டியநிலையில் இவ்வாறு கருத்துக் கூறுவதை தவிர்ப்பது சிறந்தது என தி.மு.க. அறிவுறுத்தியுள்ளது.
