ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் பிரதமருக்கு ஒரு சட்டம், முதல்வர்களுக்கு ஒரு சட்டம் என தேர்தல் ஆணையம் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் பிரதமருக்கு ஒரு சட்டம், முதல்வர்களுக்கு ஒரு சட்டம் என தேர்தல் ஆணையம் செயற்பட்டு வருகிறது. புயல் வந்தால் கூட முதல்வர் ஆய்வு நடத்தக்கூடாதா? ஆனால் பிரதமர் மட்டும் எந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தலாம் என்பது எந்தவிதத்தில் நியாயம்.
பிரதமருக்கு தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வராதா? தேர்தல் நடைபெற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்கு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை. மேற்குவங்கம், மத்திய பிரதேச மாநிலத்திலும் இதே நிலை. வாக்கு சதவீதத்தை குறைக்கவே 7 கட்டமாக தேர்தலை வைத்துள்ளனர். வாக்கு இயந்திரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றேன்.
சர்வதேச அளவில் பல நாடுகளில் வாக்கு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவேதான் அங்கு மீண்டும் வாக்குச்சீட்டு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் வழக்குப்பதிவு செய்வீர்களா? மோடி பிரசாரத்தில் பேசுவதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
23ஆம் திகதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் தற்போது அவர் பேசும் வார்த்தைகளில் இருந்தே தெரிகிறது. எதிர்க்கட்சிகளை பார்த்து செய்வதறியாமல் உள்ளார்.
சிற்றுண்டிக்கு ஒரு உடை, மதிய உணவுக்கு ஒரு உடை, மாலையில் ஒரு உடை என தோற்றம் அளித்து வருகிறார். எதிர்க்கட்சியில் யார் பிரதமர் என மோடி கேட்கிறார். யார் பிரதமர் என்பது குறித்து எங்களுக்கு தெளிவு உள்ளது. முடிவு வந்த பின்னர் அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம்” என அவர் கூறினார்.