இந்த விவகாரம் தொடர்பாக ஒட்டாவா சார்பில் அமெரிக்கா சீனாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரியா ஃப்ரீலண்ட், நிதியமைச்சர் மற்றும் அமெரிக்காவிற்கான கனேடிய தூதுவர் ஆகியோர் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் நிதித் தலைமை அதிகாரி கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.