அருகில் சந்தேகத்துக்கு இடமான பொதியிலிருந்து சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சந்தேகத்திற்கு இடமான பொதிகள் காணப்பட்டன.
குறித்த காட்டுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பொதிகளை சோதனையிட்டனர்.
இதன்போது அப்பொதிகளில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட சி-4 வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.