(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றினைவோம்' செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.
அந்தவகையில் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள சமூக சேவை தினைக்களத்தின் ஊடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் விஷேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், முதியோருக்கான கொடுப்பனவுகள், முதியோர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது
கோறளைப்பற்று மத்தி உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.அல் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், ஜனாதிபதி செயலகத்திற்கான மேலதிக செயலாளர் எஸ்.பல்லேகம, பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எஸ்.ருவைத் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் விஷேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், முதியோருக்கான கொடுப்பனவுகள், முதியோர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி வைக்கப்பட்டதுடன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் பொலித்தீன் பாவனையற்ற அலுவலகமாக பிரகடணப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.