ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்த சம்பவம் குறித்த தகவல் வெளியானது.
இதன்போது அப்பகுதியில் வெடிப்பில் சிதறிய மோட்டார் சைக்கிள் பாகங்களும் காணப்பட்டன.
இந்நிலையில், இது குறித்து மேலும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 16ஆம் திகதி அந்தப் பகுதியில் ஒத்திகை பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அந்த காணியின் உரிமையாளர் கடந்த 18ஆம் திகதி பொலிஸில் இவ்வாறு வெடிப்பு சம்பவமொன்று தனது காணியில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, குறித்த மோட்டார் சைக்கிள் வேறு மாவட்டத்திலிருந்து அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஒத்திகைக்கு “டீயோ” ரக மோட்டார் சைக்கிள் ஒன்று பயன்டுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.