தமக்கான வீட்டுத் திட்டங்களை விரைவில் அமைத்துத் தரவேண்டும் எனக் கோரிய இப்போராட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதன்போது வயோதிபர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என பல தரப்பினரும் அங்கு கூடியதோடு, பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மக்கள் கையளித்தனர்.
இவர்கள் தற்போது குடியிருக்கும் காணி ஒரு தனி நபருக்குச் சொந்தமானது எனவும் அதனால் இவர்களுக்கு அதே இடத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்க முடியாது எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த காணிகளை விடுத்து வேறு இடத்தில் காணிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.