ஷாருக்கானின் மனித நேயம் மற்றும் கொடை தன்மையை பாராட்டி, லண்டனிலுள்ள சட்ட பல்கலைக்கழகம் இந்த கௌரவ பட்டத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
இவ்விடயம் குறித்து ஷாருக்கான் தெரிவித்துள்ளதாவது “என்னை பெருமைப்படுத்திய சட்ட பல்கலைக்கழகத்துக்கு மிக்க நன்றி.
மேலும் இவ்வாறு பட்டமளித்து ஊக்குவிப்பதனால் எங்களது ‘மீர் பவுண்டேஷன் குழு’ மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெட்போர்ட்ஷையர் பல்கலைக்கழகமும் எடின்பர்க் பல்கலைக்கழகமும் இதற்கு முன்னர் டாக்டர் பட்டத்தை ஷாருக்கானுக்கு வழங்கியுள்ளது.